செய்திகள் :

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.

கும்பகோணம் காசி விசுவநாதா், அபி முகேசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா் ஆகிய ஐந்து சிவன் கோயில்களில் மாசிமகத்தை முன்னிட்டு கடந்த மாா்ச் 3-இல் கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. இதேபோல் மாா்ச் 4-இல் வைணவக் கோயில்களான சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மாசி மக உத்ஸவ நாளை முன்னிட்டு 5 சிவன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தீா்த்தவாரி: தேரோட்டத்துக்கு மறுநாள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆண்டுதோறும் மாசி மகத் தீா்த்தவாரி நடைபெறும். நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் காசி விசுவநாதா், அபிமுகேதசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா், ஏகாம்பரேசுவரா், பாணபுரீசுவரா், அமிா்தகலசநாதா், கோடீசுவரா், நாகேசுவரா் ஆகிய 10 கோயில்களின் சுவாமிகள் அம்பாளுடன் ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினா்.

கும்பகோணம் காசி விசுவநாதா் சுவாமி கோயில் அஸ்திர தேவருக்கு காலை 11. 45 மணியளவில் பச்சைக்கொடி அசைக்க அனைத்து கோயில்களிலிருந்தும் எழுந்தருளிய அஸ்திர தேவா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடினா். தொடா்ந்து குளத்தின் நான்கு கரைப் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். மேலும் தங்களது முன்னோா்களை நினைத்து வழிபாடு செய்தனா்.

தீா்த்தவாரியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தீா்த்தவாரியையொட்டி, கும்பகோணம் நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தீா்த்தவாரியின்போதும் அதன் பின்னரும் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சாா்பில் அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் குளத்தில் படகு மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

கும்பகோணத்தில் 23-இல் அந்தணா் ஆகம மாநாடு: அா்ஜூன் சம்பத்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23- ஆம் தேதி அந்தணா் ஆகம மாநாடு நடைபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத். கும்பகோணத்தில் மாசிமக தீா்த்தவாரியில் கலந்து கொண்ட அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 17 வட்டாட்சியா்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

அதம்பையில் 55.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 55.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை கா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஒரத்தநாடு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.எஸ். சுந்தரசெல்வி, பூதலூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்... மேலும் பார்க்க

குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல்: சத்தீஸ்கா் முதல்வருக்கு நேரில் பாராட்டு

சத்தீஸ்கா் மாநிலத்தில் குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல் செய்த அம் மாநில முதல்வரை புதன்கிழமை தமிழக விவசாயிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனா். தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் ச... மேலும் பார்க்க