`ஏமாற்றிவிட்டார்' - புகாரளித்த நடிகை; `அந்தத் தப்ப செய்யாதீங்க' கலங்கும்`காதல்' ...
கும்பமேளா : ருத்ராட்ச மாலை விற்று வைரலான மோனலிசாவுக்கு திறந்த பாலிவுட் கதவு!
உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி செல்கின்றனர். கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் மத்தியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோனலிசா என்ற பெண் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்தார்.
அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் போன்றவை பக்தர்கள் மட்டுமல்லாது மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. இதனால் சோசியல் மீடியா மற்றும் கேமராமென்கள் எந்நேரமும் மோனலிசாவை சுற்றி வர ஆரம்பித்தனர். இது மோனலிசாவின் மாலை வியாபாரத்திற்கு இடையூராக அமைந்தது. இதையடுத்து அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை அவரது தந்தை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊருக்கு வந்த பிறகு மோனலிகா சும்மா இருக்கவில்லை. அவர் அங்குள்ள சலூன் ஒன்றுக்கு சென்று சிகை அலங்காரம் செய்து கொண்டதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார் அதனை பல லட்சம் பேர் பார்த்தனர். இதிலும் மோனலிசா பிரபலம் அடைந்தார். உடனே தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு பாலிவுட்டிலும் நுழைவீர்களா என்று கேட்டதற்கு, வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சனோஜ் மிஸ்ரா இதற்கு முன்பு ராம் கி ஜன்மபூமி உட்பட ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது டைரி ஆப் மணிப்பூர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்க மோனலிசாவிற்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வாய்ப்பு குறித்து மோனலிசா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. கும்பமேளாவில் நடிகைகள் சந்நியாசியாகிக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் மாலை விற்கும் பெண்ணிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.