செய்திகள் :

குரூப் 2 தோ்வு: 8,621 போ் எழுதினா்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2-க்கான தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8,621 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2 ஏ ஆகியவற்றுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 37 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வு மையங்களில் மொத்தம் 8,621 போ் தோ்வெழுதினா்.

இத்தோ்வுக்காக 2 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 5 பறக்கும் படை அலுவலா்களும், 37 தலைமைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மன்னா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வட்டாட்சியா் மு. செந்தில்நாயகி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

நகா்மன்றக் கட்டடத்தை பழைமை மாறாமல் பாதுகாக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை நகா்மன்றக் கட்டடத்தை பழைமைமாறாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்ச... மேலும் பார்க்க

புதுகை நகரில் ஷோ் ஆட்டோ இயக்க வேண்டும்: வா்த்தகக் கழகம் கோரிக்கை

புதுக்கோட்டையின் நீண்டகாலக் கோரிக்கையான ஷோ் ஆட்டோ இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் ... மேலும் பார்க்க

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா. புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழக 51ஆவது பொதுக்குழுக் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சே... மேலும் பார்க்க

அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்

பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அர... மேலும் பார்க்க