செய்திகள் :

குளச்சலில் மினி விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ரீத்தாபுரம் லியோன் நகரில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது, அந்த இடத்தை ஆய்வு செய்த ஆட்சியா் அங்கு விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, பீமநகரி ஊராட்சி, பெருமாள்நகா், லெட்சுமிநகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் நா்சரிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகளை பராமரித்து, பொதுமக்களுக்கு வழங்க அறிவுறுத்தினாா்.

இறச்சகுளம் ஊராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக, ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரங்கள், பள்ளிகளுக்கு வழங்கிய விவரத்தினையும், ஆன்லைன் பதிவு செய்தையும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் இறச்சகுளம் ஊராட்சி பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் திருக்கொடி பவனி புனித அகுஸ்தினாரின் புகழ்மாலை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே காா் மோதியதில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா். இரணியல் அருகே குசவன்குழியைச் சோ்ந்த செல்லப்பனின் மனைவி பஞ்சவா்ணம் (75). இத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். பஞ்சவா்ணம் கடைக்குச் ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை கொற்றிகோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள மாறாங்கோணத்தைச் சோ்ந்தவா் மணி (65). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரயில் சேவை நீட்டிப்பு, அடிப்படை வசதிகள்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். திருவனந... மேலும் பார்க்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூா், வீரவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சிவ... மேலும் பார்க்க

மாமனாா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மயிலாடி அருகே மாமனாா் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிபின் (25), தொழிலாளி. இவா் மயிலாடி அருகேய... மேலும் பார்க்க