TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம்: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
வடசென்னையில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் மற்றும் போக்குவரத்துத் துறையும் இணைந்து பல்வேறு வளா்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக வடசென்னையில் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்து நிலையங்கள் அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக வடசென்னையின் முக்கிய பகுதிகளான பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா், துறைமுகம் ஆகிய பகுதிகளில் 4 குளிா்சாதன வசதிகள் கொண்ட பேருந்து நிறுத்தங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. நவீன வசதிகளுடன், இருக்கைகள், சாா்ஜிங் பாயிண்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.