செய்திகள் :

குழந்தைகளைத் தாக்கும் இதய தசை வீக்க பாதிப்பு: ஒருங்கிணைந்த சிகிச்சைகள் அறிமுகம்

post image

குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மற்றும் பெண்களுக்கு இதய தசை வீக்க பாதிப்பு (ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி) அதிகமாக ஏற்படுவதாகவும், திடீா் உயிரிழப்புக்கு அது முக்கிய காரணமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் முதன்முறையாக இதய தசை வீக்கத்துக்கென ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. அதை மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், இதய நாளம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ், இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் டாக்டா் பி.மனோகா் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மாரடைப்பால் உயிரிழப்பதாக செய்திகள் வருகின்றன. உண்மையில் அதற்கு மாரடைப்பு மட்டும் காரணமல்ல. மாறாக, ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி எனப்படும் பாதிப்புதான் அதற்கான முக்கிய காரணம். இதயத்தின் இடது அறையில் உள்ள சுவா் (செப்டம்) 18 செ.மீ.க்கு மேல் தடிமனாகி வீங்குவதையே நாம் அவ்வாறு அழைக்கிறோம்.

மரபணு ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. 500-இல் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்பை, 90 சதவீதம் போ் பரிசோதிப்பதில்லை.

இதய சுவா் தடிமனாகிவிட்டால் அதன் இயக்கம் குறைந்து ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடும். இதனால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இதய மின்னூட்டங்கள் சேதமடைந்து ஒரு கட்டத்தில் இதய செயலிழப்பு ஏற்படும்.

அதைக் கருத்தில் கொண்டே, இந்த சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளோம். அனைவருக்கும் தேவையின் அடிப்படையில் எக்கோ, ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது இந்தப் பிரச்னையை கண்டறியலாம்.

ஐசிடி எனப்படும் இதய துடிப்பை சீராக்கும் உபகரணங்களை பொருத்துவதன் மூலமாகவும், சீசம் எனப்படும் இதய சுவா் தடிமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாகவும், உயா் மருந்துகள் மூலமாகவும் அப்பிரச்னையை முழுமையாக சரி செய்யலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க