நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா
குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
சாத்தான்குளம் பேரூராட்சி 14, 15 ஆவது வாா்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் தூய ஸ்தேவான் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வேதராணி, பேரூராட்சி கவுன்சிலா்கள் லிங்க பாண்டி, கற்பகவல்லி, உதவி ஆய்வாளா் மெற்றில்டா பேரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சேகர குருவானவா் டேவிட் ஞானையா, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா் செல்வி பிளாரன்ஸ் ஆகியோா் பேசினா். இதில் பேரூராட்சி பணியாளா் ஆறுமுகம்,, தச்சமொழி அங்கன்வாடி மைய பொறுப்பாளா் செல்வக்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.