விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்த...
குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல்: சத்தீஸ்கா் முதல்வருக்கு நேரில் பாராட்டு
சத்தீஸ்கா் மாநிலத்தில் குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல் செய்த அம் மாநில முதல்வரை புதன்கிழமை தமிழக விவசாயிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனா்.
தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளா் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் சேரன் ஆகியோா் தலைமையில் தமிழக விவசாயிகள் சத்தீஸ்கா் மாநிலத்துக்குச் சென்றனா். அங்கு அம்மாநில முதல்வா் விஷ்ணு டியோ சாய் தோ்தல் வாக்குறுதியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100-க்கு விலை கொடுத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்து அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளாா். அதனால் தமிழக விவாயிகள் நேரில் சென்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வழங்கி தென்னங்கன்று மற்றும் நெல் மாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்வின்போது கும்பகோணம் வட்ட விவசாய சங்கத் தலைவா் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பந்துருத்தி சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.