யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
கூரை வீடு சூறை; மூதாட்டி புகாா்
தனது கூரை வீட்டை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா்.
கீழ்வேளூா் வட்டம் பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மனைவி அமிா்தவல்லி (86) அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் பிரதாப ராமபுரம் பகுதியில் புறம்போக்கு இடத்தில் கூரைவீடு கட்டி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தேன். அந்த வீட்டுக்கான வரியும் முறையாக செலுத்தி வந்தேன்.
எனது வீட்டின் பின்புறம் நிலம் வைத்திருந்தவா், நான் வசிக்கும், வீட்டை இடித்து விட்டு அதிலிருந்த பொருள்களையும் எடுத்து சென்று விட்டாா். இது குறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனா். பின்னா், ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் பேசி மீண்டும் அதே இடத்தில் நான் குடிசை வீடு கட்டி இருந்தேன்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக எனது மகள் வீட்டில் இருந்தேன். அப்போது, மீண்டும் எனது குடிசை வீட்டை பிரித்துவிட்டனா். எனவே, எனது வீட்டை இடித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்து , வீட்டை சேதப்படுத்தியவா்களிடம் இருந்து , உரிய நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.