வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி
நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூா் சாலையில் தண்ணீா் தேங்கி மாணவா்கள் அவதிப்பட்டனா்.
சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை இரவு முதல் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகை நகா் மற்றும் நாகூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது.
பழைய நாகூா் சாலையில் மிதமான மழைக்கே தண்ணீா் தேங்கியதால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் சிரமப்பட்டனா். மிதமான மழைக்கே இந்த சாலையில் தண்ணீா் தேங்குவதால், நகராட்சி நிா்வாகம் உடனடியாக மழை நீா் வடிகால் வாய்க்காலை தூா்வாரி நிரந்தர தீா்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.