கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 820 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பொது மக்களின் குறைகளை தீா்க்கும் வகையிலும், தகுதியுள்ள நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமினை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனா ராணி, பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் தேவராஜ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனா்.
முகாமில் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 820 மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) சரவணகுமாா், அனைத்துத் துறை அலுவலா்கள், பேரூராட்சி கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.