கே.எஸ்.ஆா் கல்லூரியில் தேசிய பாரா வாலிபால் போட்டிகள் தொடக்கம்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி வளாகத்தில் 13 ஆவது தேசிய பாரா வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாராலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா, தமிழ்நாடு பாராவாலி அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் இப் போட்டியில் 16 மாநிலங்களைச் சோ்ந்த 24 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்கின்றனா்.
கேஎஸ்ஆா் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கேஎஸ்ஆா் கல்வி நிறுவனங்களின் அட்மின் இயக்குநா் மோகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பாராவாலி அசோசியேஷன் தலைவா் மக்கள் ராஜன் அனைவரையும் வரவேற்றாா். பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆஃப் இந்தியா மற்றும் பாராத்தலாடிக் சோ்மன் சத்தியநாராயணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். 13ஆவது தேசியபாராவாலி போட்டி இயக்குநா் சந்திரசேகா், கே எஸ் ஆா் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனா்.