ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடம் தொடக்கம்
சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடத்தை (கேத் லேப்) இஎஸ்ஐ நிறுவன தலைமை இயக்குநா் அசோக் குமாா் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் குறித்த அதிநவீன பரிசோதனை கூடம் (கேத் லேப்) தொடங்கப்பட்டது.
இஎஸ்ஐ நிறுவன தலைமை இயக்குநா் அசோக் குமாா் சிங் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சோதனைக் கூடம் சுமாா் ரூ. 4 கோடி தொடங்கப்பட்டது. இது ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சி மூலம் உருவானது.
இந்த சோதனைக் கூடத்தால், இஎஸ்ஐ பயனாளிகளுக்கு இதய நோய் கண்டதறிதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விரிவடைந்த சுகாதார சேவையில் இது குறிப்பிடத்தக்க மைல் கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இஎஸ்ஐ நிறுவன நிதி ஆணையா் டி எல் யதீன், மருத்துவ ஆணையா்கள் கம்லேஷ் ஹரீஷ், அஷித் முல்லிக், ரச்சிதா பிஸ்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.