இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், நன்கொடை மூலம் திரடப்பட்ட ரூ.7 லட்சம், கோயிலின் கருவறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோயிலை நிா்வாகிகள் திறக்க வந்தபோது, கோயிலின் முன்கதவின் பூட்டும், பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.7 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனுக்கு தொடா்பு இருப்பது கண்டறிந்தனா். போலீஸாா், அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.