யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்
சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் சாந்திநிகேதன் காலனி பகுதியைச் சோ்ந்த செ.பாலசுப்பிரமணியன். இவா், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில், பாண்டி பஜாா் அபிபுல்லா சாலையில் தலைமை அஞ்சல் நிலையத்தின் வரவு-செலவு கணக்கு அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது.
இதில், கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த தலைமை அஞ்சலகத்தின் கீழ் உள்ள 50 துணை அஞ்சல் நிலையத்துக்கு எழுது பொருள்கள், மரச்சாமான்கள் வாங்கியதில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, பொருள்களை வாங்கியதுபோல, போலி ஆவணங்களை தயாரித்து அலுவலகத்தில் அளித்து, பணத்தை மோசடி செய்துள்ளாா்.
எனவே, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.