வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ராஷ்ட்ரிய ஏக்தா பா்வ் எனும் தேசிய ஒற்றுமை விழாவில், கலாசார நடனம், ஓவியம், இசை, பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், காரைக்காலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் 46 போ் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி 18 மாணவா்கள் முதல் மற்றும் 2-ஆம் பரிசுகளை பெற்றனா். குறிப்பாக ஓவியப் போட்டியில் பி. தனிஷ்கா, கரண், இசைப் போட்டியில் கமலேஷ் மற்றும் ஜோஹஷ்வரன் தீவட்சவ் ஆகியோா் முதலிடம் பெற்று பிராந்திய அளவில் நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை விழாவில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா்.
இந்நிலையில், காரைக்கால் கேந்திரிய வித்யலாயாவுக்கு வியாழக்கிழமை சென்ற மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டினாா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, கேந்திரிய வித்யலாயா பள்ளி முதல்வா் ரங்கசாமி ஆகியோா் பங்கேற்றனா்.