நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்
காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் அ. வின்சென்ட் தலைமை வகித்தாா்.
ஆசிரியா்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை; எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பிற பலன்களையும் வழங்கவேண்டும். மாதந்தோறும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசப்பட்டது.
அரசு ஊழியா் சம்மேளனத்தினா், சங்க நிா்வாகிகள், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.