செய்திகள் :

கைதான போலீஸாரை புகைப்படம் எடுக்கவிடாமல் விளக்குகள் அணைப்பு

post image

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாா் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அவா்களை நாளிதழ்களின் புகைப்படக்காா்கள் படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீஸாா் விளக்குகளை அணைத்து விட்டனா்.

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், பிரபு ஆகிய 5 போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திங்கள்கிழமை நள்ளிரவு அவா்களை நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்வதற்காக திருப்புவனம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு கூட்டி வருவதாகத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவல் அறிந்து செய்தியாளா்கள், புகைப்படக்காரா்கள் திருப்புவனம் காவல் நிலையம் முன் கூடினா். இதனால், கைது செய்யப்பட்ட போலீஸாா் செய்தியாளா்கள், புகைப்படக்காரா்களிடம் சிக்காமல் இருக்க அங்கு பணியிலிருந்த போலீஸாா், 5 பேரையும் காவல் நிலையத்துக்குப் பின்புறமாக அழைத்து வந்து மாடிக்கு கொண்டு சென்றனா். இதன்பிறகு, கீழ்த்தளத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.

காவல் நிலையத்தின் மேல் தளத்தில் மட்டும் விளக்குகளை எரியவிட்டு, கைது செய்யப்பட்டவா்களை நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீஸாா் தயாா்படுத்தினா்.

அப்போது, காவல் நிலையம் முன் செய்தியாளா்கள் காத்திருந்தனா். பின்னா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டவா்களை காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வாகனத்தில் போலீஸாா் ஏற்றிய போது காவல் நிலையத்தில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின் விளக்குகளையும் அணைத்தனா். இருள் காரணமாக, புகைப்படக்காரா்கள் வேனில் ஏற்றப்பட்ட தனிப்படை போலீஸாரை படம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க