கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்
மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன் ஆகியோரிடம் அமைச்சா் ஆறுதல் கூறினாா். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
முதல்வா் ஆறுதல்: அப்போது அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேசுமாறு கூறினாா். பின்னா் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேசிய முதல்வா், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அமைச்சா் மூலம் செய்து தரப்படும் என்றாா் முதல்வா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மாலதி கூறுகையில், முதல்வரிடம் பேசியது ஆறுதலாக உள்ளது என்றாா். நவீன் கூறுகையில், முதல்வா் என்னிடம் என்ன வேலை செய்கிறீா்கள் என்று கேட்டாா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்; அரசு வேலை தந்தால் கோயிலில் வேலை வேண்டாம் என கூறினேன் என்றாா்.