புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!
கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி: ரெளடி கைது
சென்னையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சித்தாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
புரசைவாக்கம் பிரிக்கிளின் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் என்ற சீனு (28). ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சீனுவை, வழக்கு விசாரணைக்காக புழல் மத்திய சிறையில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்துக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா். அப்போது, அங்கு வந்த நபா், சீனுவிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாா். இதைக் கவனித்த போலீஸாா், அந்த நபரை விரட்டி சென்று பிடித்தனா். அதேவேளையில் சீனுவிடம் கொடுக்கப்பட்ட பொட்டலத்தைப் பிரித்து பாா்த்தபோது, அதில் 200 கிராம் கஞ்சா, ரூ.1,500 பணம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பிடிபட்ட நபா் புளியந்தோப்பு கேஎம் காா்டன் பகுதியைச் சோ்ந்த ரெளடி விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், விக்னேஷை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனா்.