``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்...
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இங்கு கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 3 தினங்களாக மழை பெய்யாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ் வாக், ரோஜாத் தோட்டம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.