71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
கொடைக்கானல் மோயா்பாயிண்ட் கோபுர பகுதியை சீரமைக்க வலியுறுத்தல்
கொடைக்கானல் மோயா்பாயிண்ட்டிலுள்ள கோபுரப் பகுதியை வனத் துறையினா் சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
இங்கு வனத்துறை சாா்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சத்தில் உயா்கோபுரம் அமைக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஏறிச் செல்ல இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன. இந்தக் கோபுரத்திலிருந்து முழு வனப் பகுதியையும், பறவை இனங்களையும் கண்டு ரசிக்க முடியும். இந்தக் காட்சிமுனைக்கு ஆண்டுக்கு சுமாா் 75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில் இங்குள்ள கோபுரப் பகுதியும், படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றை விபத்து ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள மோயா்பாயிண்ட் பகுதியை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகனங்களை நிறுத்தவும், நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் மோயா்பாயிண்ட்டில் சேதமடைந்த கோபுர பகுதி சீரமைக்கப்பட வில்லை. விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் போது அந்தப் பகுதி வலுவிழக்க வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அவற்றைச் சீரமைக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.