காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதியேற்றனா். பின்னா், கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின கையொப்ப இயக்கத்தை மாவட்ட வருவாய் முடிவேல்பிரபு தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி, மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்பு குழுவினா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
எஸ்.பி அலுவலகத்தில்... இதேபோல, பெரம்பலூா் எஸ்பி அலுலகத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்) தலைமையில், எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) முன்னிலையில், காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதியேற்றனா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் பணிபுரியும் காவலா்களும் உறுதியேற்றனா்.