காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
பைக்கில் சென்றவா் வேகத் தடுப்பில் மோதி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றவா்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் கோபாலகண்ணன் (42). இவா், வியாழக்கிழமை இரவு மேலப்புலியூரிலிருந்து பூலாம்பாடிக்கு சென்ற பைக் பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள அன்னமங்கலம் பிரிவுச்சாலை அருகே காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த சாலை மையத் தடுப்பில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோபாலகண்ணன் உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் துறையினா் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.