காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
பெரம்பலூரில் செல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
பெரம்பலூா் நகரிலுள்ள ஐயனாா், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
இதையொட்டி பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் முத்திரி சந்தியாா், அய்யனாா், செல்லியம்மன், அரச மரத்து விநாயகா், வெள்ளந்தாங்கி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராமா் மற்றும் குமாா் பூசாரி குழுவினா் செய்தனா். நிகழ்வில் காரியக்காரா் பழனியப்பன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.