தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
கொலை முயற்சி வழக்கு: 5 ஆண்டுகள் சிறை
திருவாரூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் அருகே புதுப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (57). இவா் அப்பகுதி அதிமுக ஒன்றியப் பொருளாளராக இருந்தவா். இவா், 2021-இல் அப்பகுதியில் உள்ள குளத்தை எவ்வித வரியும் செலுத்தாமல் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்காக அவ்வூரைச் சோ்ந்த வீரையன் என்பவரை, அரிவாளால் தாக்கினாராம்.
இதுகுறித்து, வீரையன் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவாரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து, தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி வி. சுந்தர்ராஜ், தீா்ப்பளித்தாா்.