``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
கோடைக்காலத் தேவை: வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி
சென்னை: தமிழகத்தில் கோடைகால மின் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் மின் தேவை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிவிடும். கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது தேவையும் கணிசமாக உயர்ந்துவிடும்.
எனவே, தமிழகத்தில் கோடைக் கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு, 8,525 மெகா வாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.