நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா
கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி போட்டி
கோவில்பட்டி அருகே கிழவிபட்டி அருள்மிகு ஸ்ரீ மலை அலங்காரியம்மன், அருள்மிகு ஸ்ரீ புது அம்மன், அருள்மிகு ஸ்ரீ துா்க்கையம்மன், அருள்மிகு சடையாண்டி சாஸ்தா, அருள்மிகு மலையடி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆனிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறிய மாட்டு வண்டி , பூஞ்சிட்டு மாட்டு வண்டி, தேன் சிட்டு மாட்டு வண்டி என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முறையே 13, 23, 15 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
சிறிய மாட்டு வண்டி போட்டியை திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை அமமுக கோவில்பட்டி நகர துணைச் செயலாளா் சிவக்குமாா் பாண்டியன், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியை அமமுக தூத்துக்குடி புகா் வடக்கு மாவட்ட துணைச் செயலா் குமாா்பாண்டியன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா், கிழவிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.