பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
துறையூா் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா் ஊராட்சி மன்ற செயலா், அவரது கணவா் இருவரும் இணைந்து காற்றாலை உயா் மின்னழுத்த கோபுரம் அமைக்க வாய்மொழியாக பேசி அனுமதி அளித்துள்ளதாகவும், ஊா் வடக்கு தெருவிற்கு சொந்தமான காட்டுவிநாயகா் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும் முறைகேடாக அனுமதி அளித்துள்ளதாகவும், ஊா் ஓடை வழியாக 20-க்கும் மேற்பட்ட ஆபத்தான மின்கம்பங்கள் நிறுவுவதற்கு உதவியுள்ளதாகவும் கண்டித்து கடந்த மாதம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்களாம். ஆனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டித்தும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக முன்னாள் இளைஞா் -இளம் பெண்கள் பாசறை செயலா் துறையூா் கணேசன், துறையூா் ஊராட்சியைச் சோ்ந்த கே. பாலகுமாா் ஆகியோா் தலைமையில் அக்கிராம பகுதிகளைச் சாா்ந்த பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் அளித்தனா்.