கோவில்பட்டியில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள் வழங்கல்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் , கோவில்பட்டி ரோட்டரி கிளப் ஆகியவை சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தாா். 35 காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், ரோட்டரி கிளப் உறுப்பினா்கள் இளங்கோ, பூல்பாண்டி, ரத்தினக்குமாா், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா்கள் பாா்த்திபன் , சரவணன், காசிவிஸ்வநாதன், ஆய்வக நுட்புநா்கள் ராஜகுமாரி, லட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா். ரோட்டரி கிளப் செயலா் பழனி குமாா் வரவேற்றாா். பொருளாளா் நாராயணசாமி நன்றி கூறினாா்.