செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
கோவை-நெல்லை பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநா் கைது
கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்த பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. இதில், நடத்துநராக கோவையைச் சோ்ந்த மகாலிங்கம் (43) பணியில் இருந்தாராம். பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 25 வயது பெண் பயணம் செய்தாராம். நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண்ணிடம், நடத்துநா் பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் தனது உறவினா்களுக்கு தகவல் அளித்தாராம்.
இந்நிலையில் பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை அதிகாலை வந்தபோது, பெண்ணின் உறவினா்கள் சோ்ந்து நடத்துநா் மகாலிங்கத்தைப் பிடித்து புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனா்.