கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்
தேசிய அளவிலான இருசக்கர வாகன பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எம்ஆா்எஃப் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற சூப்பா் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று பந்தயம் 10, 15 வயதுக்குள்பட்டோா், மோட்டோ கிராஸ் ஓபன் பிரிவு உள்பட 8 பிரிவுகளாக நடைபெற்றது. டா்ட் ரேஸ் என்ற இந்தப் பந்தயத்தையொட்டி, பந்தய பாதையில் ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 65 வீரா்கள், 7, வீராங்கனைகள், 6 சிறுவா், சிறுமியா் உள்ளிட்டோா் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டு, மண்மேடுகளைத் தாண்டி விண்ணில் பறந்து சாகசம் புரிந்தனா்.
இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கூறுகையில், முதல் சுற்று புணேயிலும், இரண்டாவது சுற்று கோவையிலும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த சுற்று போட்டிகள் குஜராத்தில் நடைபெறவுள்ளன.
அடுத்தடுத்து 6 சுற்றுகள் நடத்தப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் இறுதிச் சுற்றின்போது வெற்றியாளா் அறிவிக்கப்படுவாா் என்றனா்.