தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு சீல்
திருப்பூரில் சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத நபா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் கிளீனிக் வைத்து நடத்தி வருவதாக மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் கண்ணன் மகாராஜனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவா் தலைமையில் அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவா் பத்மநாபன், அலுவலக கண்காணிப்பாளா் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட கிளீனிக்கில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு மருத்துவம் பாா்த்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனா். இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த விக்ரம் என்பதும், ஜாா்ஜியாவில் மருத்துவம் பயின்ற அவா் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் கிளினிக் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கிளினீக்குக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், விக்ரமிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவருக்கு உதவியாக செயல்பட்ட நிம்மி என்பவரைத் தேடி வருகின்றனா்.