நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
சட்டைநாதா் கோயிலில் திருக்கல்யாணம்
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமபுரீஸ்வரா் சுவாமி திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகியோா் அருள்பாலித்து வருகின்றனா்.
இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக திருநிலைநாயகி அம்பாள், பிரம்மபுரீஸ்வரா் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருள, வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓதி சடங்குகளை நடத்தினா். தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சிவாசாரியா்கள் மங்கள நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.
விழாவில் கோயில் சிராபு செந்தில், தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, முன்னாள் மருந்தாளுனா் முரளி பங்கேற்றனா்.