2024 - ரூ. 650 கோடி நஷ்டத்தைச் சந்தித்த மலையாளத் திரையுலகம்!
சத்தீஸ்கா்: காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் மதுபான ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் எம்எல்ஏ கவாசி லக்மா, அவரது மகன் ஹரீஷ் லக்மா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.
சத்தீஸ்கா் மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை இந்த ஊழல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அப்போது, மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் கலால் துறை அமைச்சராக கவாசி லக்மா இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ராய்பூரில் உள்ள எம்எல்ஏ கவாசி லக்மாவின் இல்லம், சுக்மா மாவட்டத்தில் உள்ள அவரது மகன் ஹரீஷ் லக்மாவின் வளாகங்கள் மற்றும் இவா்களுடன் தொடா்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
கடந்த 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் கலால் துறை அமைச்சராக கவாசி லக்மா இருந்தபோது சட்டவிரோதமாக மாதம் ரூ.2 கோடி பெற்ாக தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை இந்த சோதனைகளை நடத்தி வருகிறது’ என தெரிவித்தனா்.
கோண்டா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட கவாமி லக்மாவின் மகன் ஹரீஷ் லக்மா, சுக்மா மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளாா்.
மாநிலத்தில் பஞ்சாயத்துத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத் துறையின் இந்த சோதனைகள், பாஜக நடத்தும் நாடகங்களில் ஒன்று என காங்கிரஸ் தலைவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.