Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
சந்திர கிரகணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை மாலை நடையடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) மாலையில் நடை சாத்தப்பட உள்ளது.
இதுதொடா்பாக இத்திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம் மாதம் 7 ஆம் தேதி இரவு 9.47 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இதையொட்டி சாயரட்சை கால பூஜைகள் மாலை 4.30 மணிக்கு நடைபெறும். அதைத் தொடா்ந்து மாலை 6 மணியளவில் திருக்கோயில் திருநடைகள் சாத்தப்படும்.
8 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு திருநடைகள் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.