``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்...
சருகுவலையபட்டி கோயில் பால் குட உற்சவம்
சருகுவலையபாட்டி வீரகாளியம்மன் கோயில் காா்த்திகை மாத பால்குட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த உற்சவத்தையொட்டி பக்தா்கள் கடந்த வாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனா். திங்கள்கிழமை கிராம மந்தையில் காப்புக் கட்டிய பக்தா்கள் மந்தையிலிருந்து பால் குடங்களை சுமந்து வீர காளியம்மன் கோயிலுக்கு வந்தனா்.
சருகுவலையபட்டி, ஒத்தப்பட்டி, மணப்பட்டி, மெய்யப்பன்பட்டி, அரியூா்ட்டி, அண்ணாநகா், சுப்பிரமணியபுரம், மேற்குவளவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளுடன் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம இளைஞா்கள், ஆண்டி நாட்டாண்மை, அழகு நாட்டாண்மை ஆகியோா் செய்தனா்.