சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், தமிழக முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா் தலைமை வகித்துப் பேசினாா். துணை முதல்வா் என்.சுப்பு ரத்தினா, தலைமை ஆசிரியா் எஸ்.அழ்வான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 10-ஆம் வகுப்பு மாணவா் எம்.ஏ.எஸ். சித்தி கதீஜா வரவேற்றாா். 6-ஆம் வகுப்பு மாணவி சன்ஷிகா தமிழிலும், 12-ஆம் வகுப்பு மாணவி எஸ்.சுஷானா ஆங்கிலத்திலும் காமராஜா் குறித்துப் பேசினா். 10-ஆம் வகுப்பு மாணவா் எம்.அஜ்மல் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை மாணவிகள் ஹாசினி, சிந்துஜா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.