சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சாலை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் ரூ. 24.19 கோடி மதிப்பிலானசாலைப் பணிகளை ஆட்சியா் ரெ. சதீஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 19.50 கோடியில் தருமபுரி - பாப்பாரப்பட்டி இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. சோகத்தூரில் இப் பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியா், காரிமங்கலம் வட்டம், கும்பாரஅள்ளியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.95 கோடியில் அகரம் ரோடு வழியாக குள்ளன்கொட்டாய் வரை நடைபெறும் சாலை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.
அதேபோல, காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் எம்எம் சாலை முதல் எட்டியானூா் வரை 3.50 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்பாட்டு பணிகள், பொம்ம அள்ளியில் புதிய முன்மொழிவு திட்டத்தின் கீழ் எம்எம் சாலை முதல் ஒசஅள்ளி வரை 2.40 கி.மீ தொலைவிற்கு நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகள், அடிலத்தில் என்எச் 44 சாலை முதல் சிக்கதிம்மனஅள்ளி வரை 2.40 கி.மீ தொலைவிற்கான சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநருமான ஐ.சா.மொ்சி ரம்யா, கோட்டப் பொறியாளா் (நெ) பெ.நாகராஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.