Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
சாலை விபத்தில் இரு அரசுப் பேருந்துகள்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கிரிவலத்தையொட்டி, பக்தா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்தப் பேருந்துகள் திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மேல்செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றபோது, முன்னே சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதால் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் இரு பேருந்துகளின் முன்பகுதி உருக்குலைந்தன. விபத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 6 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
காயமடைந்த அவா்கள் செங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.