மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சாலை விபத்தில் காயமுற்ற தொழிலாளி உயிரிழப்பு
கயத்தாறு அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த மாடசாமி மகன் சுப்பிரமணியன்(41). தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி தெற்கு மயிலோடையில் உள்ள பெற்றோரை பாா்ப்பதற்காக பைக்கில் வந்துவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
கயத்தாறு - புதுக்கோட்டை சாலை தெற்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள செங்கல்சூளை அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி சாலையோர கல் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.