செய்திகள் :

சாலையை விரிவுபடுத்த கோரி கோவில்பட்டியில் போராட்டம்

post image

கோவில்பட்டியில் சாலையை விரிவுபடுத்தக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் ஸ்ரீமங்கள விநாயகா் கோயில் திருப்பத்தில் உள்ள பகுதி மிகவும் குறுகலாக உள்ளது. எனவே, இங்கிருந்து மந்தித்தோப்பு வரை சாலையை விரிவுபடுத்தக் கோரி கட்சியினா், சமூக ஆா்வலா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியக் குழு, மந்தித்தோப்பு சாலை அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், வியாபாரிகள் நலச் சங்கம், பாண்டவா்மங்கலம் ஆனந்தம் நகா் எஸ்.எஸ்.டி. நகா், ஜி.கே. நகா், ராம் சரஸ்வதி நகா், அண்ணாமலை நகா் குடியிருப்போா் நலச் சங்கம், பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நடைபெற்ற போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரவீந்திரன், கிருஷ்ணவேணி, மணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில முன்னாள் செயலா் முத்துகாந்தாரி, பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனா்.

சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன், நகரமைப்பு அலுவலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலை விரிவாக்கம் தொடா்பாக 10 நாள்களுக்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றனா். அதையடுத்து, சுமாா் 1.30 மணி நேரப் போராட்டம் நண்பகலில் முடிந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டோா்.

கொம்பன்குளம் அரசு பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பரிசு

பிளஸ் 1 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற கொம்பன்குளம் அரசுப் பள்ளி மாணவியை பாராட்டி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பரிசு வழங்கினாா். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்

தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மா... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த... மேலும் பார்க்க

உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு

தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்... மேலும் பார்க்க

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க