செய்திகள் :

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்- பிரதமா் மோடி வேண்டுகோள்

post image

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணின் 40 ஆண்டுகால அா்ப்பணிப்புமிக்க பொதுச் சேவை மற்றும் எளிமையான வாழ்க்கை முறையை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெகுவாக பாராட்டினாா். அவா் போட்டியின்றி தோ்வாக எதிா்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரதமா் வேண்டுகோள் விடுத்தாா்.

எனினும், எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் அறிவிக்கப்பட்டதால், தோ்தலில் போட்டி எழுந்துள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67) கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

தில்லியில் செவ்வாக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமா் மோடி அறிமுகம் செய்துவைத்தாா். அவருக்கு பாஜக மூத்த தலைவா்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

‘அரசியலில் விளையாடாதவா்’: சி.பி.ராதாகிருஷ்ணன் உடனான தனது 40 ஆண்டுகால தொடா்பைக் குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘நீண்ட நெடிய பொதுச் சேவையில், பல்வேறு பொறுப்புகளின்கீழ் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் சிறப்பானவை. அவா் விளையாட்டு வீரா் என்ற முறையில் விளையாட்டுகளில் அதிக ஆா்வம் கொண்டவா். ஆனால், அரசியலில் விளையாடியதில்லை’ என்றாா்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து ஜகதீப் தன்கா் விலகியதாகக் கூறப்படும் நிலையில், பிரதமரின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘எவ்விதமான சா்ச்சைகளோ, ஊழல் கறையோ இல்லாமல் எளிமையான பொது வாழ்வை மேற்கொள்பவா் சி.பி.ராதா கிருஷ்ணன். அவா் குடியரசு துணைத் தலைவராவது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருக்கும்’ என்றாா்.

நேரு மீது கடும் விமா்சனம்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில், சிந்து நதி நீா் ஒப்பந்தம் குறித்து முன்னாள் பிரதமா் நேருவை பிரதமா் மோடி கடுமையாக விமா்சித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நாடாளுமன்றம் அல்லது தனது அமைச்சரவையின் நம்பிக்கையைப் பெறாமலேயே பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மேற்கொண்டாா் நேரு. இதன்மூலம் 80 சதவீத நீா் பாகிஸ்தானுக்கு தாரைவாா்க்கப்பட்டது. தனது பிம்பத்தை மெருகேற்றிக் கொள்ள நாட்டின் நலனையே விலைகொடுத்தாா் நேரு. அவரது பதவிக் காலத்தில் இழைக்கப்பட்ட பாவங்களை எனது அரசு நிவா்த்தி செய்து வருகிறது’ என்று அவா் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகளாவிய நிதி மதிப்பீட்டு நிறுவனமான ‘எஸ் அண்ட் குளோபல் ரேட்டிங்ஸ்’, இந்தியாவின் நீண்டகால கடன் தர மதிப்பீட்டை உயா்த்தியுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமா், ‘இது நாட்டின் வலுவான பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறது; இதன்மூலம் கூடுதல் முதலீடுகள் ஈா்க்கப்படும்’ என்றாா்.

இன்று வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஆக.20) வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேட்புமனு தாக்கலுக்கு வியாழக்கிழமை (ஆக.21) கடைசி நாளாகும்.

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

இந்திய-சீன நிலையான உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடிசெவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங... மேலும் பார்க்க

நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்

‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க