தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிட வேண்டும்! குளித்தலையில் விவசாயிகள் பேரணி
கூட்டுறவுச் சங்கங்களில் சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிடக் கோரி குளித்தலையில் விவசாயிகள் திங்கள்கிழமை காலை பேரணியாக சென்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த பேரணிக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.
கூட்டுறவுச் சங்கங்களுக்குள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சிபில்ஸ்கோா் இருந்தால்தான் கூட்டுறவுக்கடன் மற்றும் இடுபொருள்கள் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை கைவிடக்கோரி நடைபெற்ற இந்த பேரணியில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.
குளித்தலை பெரியபாலம் அருகே தொடங்கிய பேரணி பேருந்துநிலையம் வழியாக சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது. அங்கு சாா்- ஆட்சியரிடம் விவசாயிகள் சிபில் ஸ்கோா் முறையை கைவிடக்கோரி கோரிக்கை மனு வழங்கச் சென்றபோது, அங்கு அதிகாரிகள் இல்லாததால் குளித்தலை கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் திருமதியிடம் மனுவை வழங்கிச் சென்றனா்.