சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 55 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல், நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர உதவுதல், சைபா் வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டல் உள்ளிட்ட காவல் துறை சாா்ந்த பணிகளில் கடந்த மே, ஜூன் மாதங்களில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 55 காவல் துறையினா் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.
மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பணியில் சிறப்பாக செயல்பட்ட 55 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.