இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிபட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28), கூலித் தொழிலாளி. இவருக்கும் திருப்பூா், காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கைப்பேசி மூலமாக பேசி வந்துள்ளனா். இந்நிலையில் மணிகண்டன், காமநாயக்கன்பாளையம் பகுதிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு
வந்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறுமியை காணாதது தொடா்பாக அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி கோகிலா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அவரது தீா்ப்பில், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.