India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவா் முருகன் (54). அப்போது, பள்ளிக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியா் முருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பேரில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதனிடையே, தலைமையாசிரியா் முருகன் திருச்சி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பாலியல் புகாா் தொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.02 லட்சம் அபராதமும் விதித்தாா்.