India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்
பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள்கள் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. பெருமாள் தம்பதி சமேதராக அனுமாா் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. லட்சுமி சமேதா் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள், மேளதாளங்கள் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டா்கள் மாலைகளை மாற்றி திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா். பூஜைகளை திருவள்ளரை கோயில் கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சீனிவாச அய்யங்காா் உள்ளிட்டோா் செய்தனா்.
சனிக்கிழமை (மே 10) சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.