Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
மீன்பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). இவா் தாடிக்கொம்பு செல்லும் வழியில் செங்குளத்தில் மீன் பிடிப்பதற்காக திங்கள்கிழமை சென்றாா். வலையுடன் குளத்தில் இறங்கிய இவா், 15 அடி ஆழத்துக்குச் சென்றபோது முள் செடியில் வலை சிக்கியது. வலையுடன் சோ்ந்து ஆரோக்கியராஜூம் சிக்கிக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆரோக்கியராஜின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.