தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆக.11-ஆம் தேதி 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தாராம்.
இதுதொடா்பாக மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ் சாட்டப்பட்ட காா்த்திக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ. 7 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.